உலக ‘சூப்பர் ஸ்டார்’ கோஹ்லி * ஷேன் வார்ன் பாராட்டு

Spread the love

லண்டன்: ‘‘உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ கோஹ்லி தான். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,’’ என ஷேன் வார்ன் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, அடுத்த இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் ஓவலில் நடந்தது. முதல் நாள் ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 127/7 என்ற மோசமான நிலையில் இருந்தது. தவிர முதல் இன்னிங்சில் 99 ரன் பின்தங்கியது.

இருப்பினும் எழுச்சி பெற்ற இந்திய அணிக்கு கடைசி நாளில் பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். முடிவில் இந்தியா 157 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரில் 2–1 என முன்னிலை பெற்றது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன் கூறியது:

இந்திய கேப்டன் கோஹ்லி, தனது அணி வீரர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, வெற்றிபெறத் துாண்டுகோலாக உள்ளார். அனைத்து வீரர்களும் கேப்டனுக்கு மரியாதை கொடுக்கின்றனர். அவருக்காக விளையாடுகின்றனர். கோஹ்லி சக வீரர்களை நடத்தும் விதத்தை பார்த்து, நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளை  விரும்பும் அவர், அதில் பங்கேற்க முக்கியத்துவம் தருகிறார். உலக கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த நாடாக திகழ்கிறது இந்தியா. மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஏனெனில்,‘டெஸ்ட் கிரிக்கெட் மிக முக்கியம், நாங்கள் ஆஸ்திரேலியா சென்றாலும் வெற்றி பெறுவோம், இங்கிலாந்து சென்றாலும் வெற்றி பெறுவோம்,’ என்பவர் கோஹ்லி.

விளையாட்டில் தன்னம்பிக்கை என்பது மிக முக்கிய விஷயம். இதுமட்டும் இல்லை என்றால் அவ்வளவு தான், எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றி கிடைக்காது. தனது சிறப்பான வழி நடத்தும் திறமையால், சக வீரர்களுக்கு மன உறுதியை ஏற்படுத்துகிறார். கோஹ்லி இருக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட நாள் நீடிக்கும். நீண்ட காலம் விளையாடுங்கள் கோஹ்லி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: