உலக கோப்பை தொடரில் சாதிப்பது எப்படி * கோஹ்லியுடன் பி.சி.சி.ஐ., ஆலோசனை

Spread the love


லண்டன்: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் சாதிப்பது குறித்து கேப்டன் கோஹ்லியுடன் பி.சி.சி.ஐ., தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் கோஹ்லி தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி., தொடர் எதிலும் சாதிக்கவில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019 உலக கோப்பை அரையிறுதி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா தோற்றது. இதனால் வரும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் கேப்டன் கோஹ்லிக்கு ‘அக்னிப் பரீட்சையாக’ இருக்கப் போகிறது. 

ஏனெனில் பைனல், அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில் கோஹ்லி–ரவி சாஸ்திரியின் அணித் தேர்வு கடும் விமர்சனத்தை சந்திக்கிறது. 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் என மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றனர். தவிர, வரும் ‘உலக’ தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

இதனால் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்து இப்போதிருந்தே ஆலோசிக்கப்படுகிறது. இப்போதுள்ள முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் என முன்னணி ‘வேகங்கள்’, அடுத்து ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பர். இவர்களது பணிச்சுமையை எப்படி பாராமரிப்பது, தீபக் சகார், புவனேஷ்வர் தயாராக இருக்கும் போது, பும்ரா, ஷமி நிலை என்ன, ‘சுழலில்’ சகால், ஜடேஜாவுடன், குல்தீப், சகால், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சகார் என யாருக்கு இடம் கிடைக்கும், ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர் பந்து வீசுவாரா, ஸ்ரேயாஸ், சூர்யகுமாருக்கு களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு தரப்படுமா என பல்வேறு கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். 

இதனிடையே லண்டன் சென்ற இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா, துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா இணைந்து, கோஹ்லியிடம் ஆலோசனை நடத்தினர். 

இதுகுறித்து கூறப்படுகையில்,‘‘கோஹ்லியுடன், பி.சி.சி.ஐ., தலைவர்கள் பேசியது உண்மை தான். இதுகுறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. ஐ.பி.எல்., தொடருக்குப் பின் இந்திய அணிக்கு எவ்வித சர்வதேச போட்டிகளும் இல்லை. நேரடியாக உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்பட்டது,’ என தெரிவிக்கப்பட்டது. 

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: