உலகின் ஆக விலை உயர்ந்த ‘தங்க’ பிரியாணி..எங்கே?

Spread the love


பிரியாணி என்று சொன்னாலே பலருக்கும் நாவூறும்.

உண்பதற்கு உகந்த 23 கேரட் தங்கம் கலந்து பிரியாணிக்கு மேலும் சிறப்புச் சேர்க்க முனைந்துள்ளது துபாயில் ஓர் உணவகம்!

அங்கே, உலகின் ஆக விலை உயர்ந்த பிரியாணி விற்கப்படுகிறது.

அது குறித்து NDTV செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

‘Royal Gold Biryani’ என்று அழைக்கப்படும் அந்த பிரியாணியின் விலை சுமார் 370 வெள்ளி.

பெரிய தங்கப் பாத்திரத்தில் பரிமாறப்படும் அந்த பிரியாணியில் குங்குமப்பூ கலந்த சோறு… அதன் மீது உண்பதற்கு உகந்த தங்க முலாம் பூசப்பட்ட kebab துண்டுகள் (கோழி, ஆட்டு இறைச்சியில் பல்வேறு வகைகள்)…பல்வேறு குழம்பு வகைகள், சாஸ் வகைகள்…

ஒரு பிரியாணியைத் தயார் செய்ய சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும்.

பிரியாணிக்கு காத்திருக்க வேண்டியிருந்தாலும்,வாழ்வில் மறக்கமுடியாத உணவு அனுபவமாக அது இருக்கும் என்று உணவகம் உறுதி அளிக்கிறது.

‘தங்க’ பிரியாணி மனத்தில் என்றும் “தங்கும்” பிரியாணியா… சுவைத்துப் பார்த்தால் தெரியும்… 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *