‘உலகளாவிய வர்த்தகத்தைக் காப்பாற்ற முனையும் இருவர்’ – வேடிக்கையாக மாறியுள்ள சூயஸ் கால்வாய் அடைப்பு

Spread the love


கால்வாயில் இருப்பதோ பெரும் கப்பல்…மாட்டிக்கொண்டிருக்கும் கப்பலை நகர்த்த முனைகின்றனர் ஆடவர்கள் இருவர்…

சூயஸ் (Suez) கால்வாயில் Ever Given எனும் சரக்குக் கப்பலின் முன்பகுதி (bow) சிக்கியிருக்கும் மணல் பகுதியைத் தோண்டி எடுக்கும் பணிகள் தொடர்கின்றன.

இருப்பினும் அவற்றின் படங்கள், இணையவாசிகளுக்கு வேடிக்கையாக மாறியுள்ளன…

Meme, gifs போன்றவை பரவலாகப் பகிரப்பட்டுவருகின்றன.

Twitter-இல் அதற்கென்று ஒரு கணக்கே தொடங்கப்பட்டுள்ளது!

‘Guy With the Digger at Suez Canal’ எனும் அந்தக் கணக்கிற்கு
16,000க்கு மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சூயஸ் கால்வாயின் அடைப்பால் உலகளாவிய வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அடைப்பு அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கப்பலை அகற்றுவதற்குச் சுமார் 9 இழுவைப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஊழியர்கள் இருவர், மணல் பகுதியைத் தோண்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இருப்பினும் 400 மீட்டர் நீளமும்
59 மீட்டர் அகலமும் கொண்ட அந்தக் கப்பலுடன் ஒப்பிடுகையில் அவர்கள் குள்ளர்களைப் போன்று தோன்றுகின்றனர் !

அவர்களின் பணிகளைக் கேலியான முறையில் வர்ணனை செய்து வருகின்றனர் இணையவாசிகள்!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *