உலகம் முழுவதும் தடுப்பூசி போடப்படாவிட்டால்,ஓராண்டுக்குள் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம் – ஆய்வு

Spread the love


Images

  • vaccine (6)

ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான காலக்கட்டத்திற்குள், தற்போது பயன்படுத்தப்படும் COVID-19 தடுப்பூசிகள் செயலிழந்து, மாற்றங்கள் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தேவைப்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் 28 நாடுகளைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர்கள், நச்சுயிரியல் வல்லுநர்கள் என மொத்தம் 77 பேர் கலந்துகொண்டதாக The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவர்களில் மூவரில் ஒருவர், 9 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று கூறினர்.

தினமும், புதிய வகை கிருமித்தொற்றுக்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

அவை இன்னும் சக்தி வாய்ந்ததாக, அதிகம் பரவக்கூடியதாக இருக்கலாம் என்று Yale பல்கலையின் தொற்றுநோய்ப் பிரிவின் துணைப் பேராசிரியர் குறிப்பிட்டார்.

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாவிட்டால், தடுப்பூசிகளைச் செயல் இழக்கச் செய்யக்கூடிய புதிய வகை நோய்த்தொற்று உருவாகலாம் என்று அவர் சொன்னார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் மும்முரமாக இருந்தாலும், தென்னாப்பிரிக்கா, தாய்லந்து ஆகிய நாடுகளின் மக்கள்தொகையில் 1 விழுக்காட்டினருக்குக்கூட இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பதை The Guardian சுட்டியது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *