உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் போராட்ட நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி! – உதயன்

Spread the love


கிளிநொச்சி – உருத்திரபுரீஸ்வரர் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு நடவடிக்கைக்கு எதிரக போராட்டம் நடத்த தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இந்த மனு இன்று (30) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உருத்திரபுரீஸ்வரர் ஆலய பகுதியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி முன்னெடுக்க திட்டமிட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் கடந்த 24ம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொன்மைவாய்ந்த இந்த சிவாலய வளாகத்தில் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என மக்கள் தெரிவித்தனர். 26ம் திகதி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கிருந்து வௌியேற நேரிட்டது.

இந்த போராட்டத்தின் போது பொதுத்தொல்லை ஏற்படுத்தப்பட்டதாக ஆலய நிர்வாகத்தின் மூவரின் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றவியல் நடவடிக்கை கோவையின் 106 ஆம் பிரிவின் கீழ் கிளிநொச்சி பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் அதனை தள்ளுபடி செய்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *