உடலின் இயக்கம் குறித்து தெரிந்துகொள்ள புதிய இரத்தச் சோதனை

Spread the love

இரவு வெகு நேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா?

காலை 9 மணி…ஆனால் உங்களுக்கு 7 மணி போலத் தோன்றுகிறதா?

இவற்றுக்கான காரணங்கள் ஒன்றரை மணி நேரத்தில் கிடைக்கலாம்.

உடல் இயங்குவது குறித்த தகவல்களை விரைவில் பெற வகை செய்யும் இரத்தச் சோதனையை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Northwestern பல்கலைக்கழகத்தில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

உடலுக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சைகளை வடிவமைக்க அந்த இரத்தச் சோதனை உதவலாம் என்று நம்பப்படுகிறது.

தூக்கம், பசி, நோய் எதிர்ப்பு ஆற்றல், இரத்த அழுத்தம் அதிகரித்தல், உடல் வெப்பநிலை மாற்றம் போன்றவற்றுக்கு உடலின் ‘கடிகாரம்’ காரணமாகக் கூறப்படுகிறது.

உடல் இயக்கத்துக்குக் காரணமான அந்த அம்சம் முறையாகச் செயல்படாதபோது இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு தகவல் அளித்தது.

குறிப்பிட்ட நேரங்களில் இரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொள்வது, கீமோ சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவை அதிகம் பலனளிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

73 பேரிடமிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ரத்தச் சோதனை செய்யப்பட்டது. 

மேலும் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *