Spread the love
Images
உடற்பயிற்சிக்குப் பிறகு பனிக்கட்டிகள் நிறைந்த நீரில் குளிப்பது விளையாட்டாளர்கள் சிலரின் வழக்கம். குறிப்பாகப் பளு தூக்குவோர் அவ்வாறு செய்வது வாடிக்கை.
ஆனால், உடற்பயிற்சிக்குப் பிறகு, பனிக் கட்டிகளை நிரப்பி நீராடுவதால் தசைகளின் வளர்ச்சி குறைவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தசைகளில் உள்ள சோர்வு குறைவதாகவும் தசைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவதாகவும் பனிக்கட்டி நீரில் குளிப்போர் கூறுகின்றனர்.
Journal of Applied Physiology சஞ்சிகையில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது. சுமார் 10 டிகிரி செல்சியஸ் தட்பனிலையில் உள்ள நீரில் குளித்த ஆடவர்கள், தண்ணீரில் குளிக்காத ஆடவர்களைவிட மெதுவான தசை வளர்ச்சியைக் கண்டதாக ஆய்வு சுட்டியது.
தசைகளின் அளவை வளர்க்க விரும்புவோர் குளிர்ந்த நீரில் குளிக்காமல் இருப்பதைப் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.