‘உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளின் அகதிகளுக்கான குழுவினரே, உலகமே உங்கள் பக்கம் உள்ளது’

Spread the love


பயர்ன் மியுனிக் (FC Bayern München) காற்பந்து அணியைச் சேர்ந்த விளையாட்டாளர், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளின் அகதிகள் குழுவுக்கு, ஆதரவான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அல்ஃபோன்சோ டேவிஸ் (Alphonso Davies) என்னும் விளையாட்டாளர், அந்தக் குழுவை உலகின் ஆகத் துணிவுமிக்க குழுவென்று வருணித்துள்ளார்.

போட்டிகள், நாளை தொடங்கவுள்ளன.

20 வயதான டேவிஸ், ஒரு முன்னாள் அகதி.

அவரது பெற்றோர், லைபீரியாவைச் சேர்ந்தவர்கள்.

கானாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் 5 ஆண்டுகள் வாழ்ந்த பிறகே, டேவிஸ் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார்.

சென்ற ஆண்டிலிருந்து, அவர் ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகளுக்கான தூதராக இருந்து வருகிறார்.

நீங்கள் நீரில் பாயும் முன், ஈட்டி எறியும் முன், களத்தில் இறங்கும் முன்… நீங்கள் தனியாக இல்லை என்பதை மறவாதீர். இடம்பெயர்ந்த 82 மில்லியன் மக்கள், உடற்குறையுள்ள 12 மில்லியன் பேர் உள்பட, உலகமே உங்களை ஆதரிக்கிறது!

என்று மனம் நெகிழும்வண்ணம் தமது Twitterஇல் எழுதியிருக்கிறார் டேவிஸ்.

நீங்கள் தோக்கியோவில் செய்வது, பிறரது வாழ்க்கையை மாற்றக்கூடும். உங்கள் சாதனைகளைப் பார்க்கும் அவர்களும் வாழ்க்கைமீது நம்பிக்கை கொள்வர்.
அவர்களே அடுத்த தாதியர், ஆசிரியர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் ஆவார்கள்… அந்த மாற்றம் விளையாட்டிலிருந்து தொடங்கும்

என்பதையும் நம்பிக்கையோடு பகிர்ந்துகொண்டார் டேவிஸ். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: