உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் COVID-19 விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

Spread the love


Images

  • tok

    படம்: AP Images

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில், COVID-19 விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நோய்த்தொற்றுப் பரிசோதனைகளை அதிகரிப்பதும், நடமாட்டக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதும் அதில் அடங்கும்.

தற்போது ஜப்பானில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி, வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கிறது.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஒலிம்பிக் கிராமத்தில் 547 பேரிடம் நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் 131பேர், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியாளர்கள் என்பது ஏற்பாட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் முடித்துப் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், அது சமாளிக்கும் ஆற்றலைக்கொண்டிருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: