உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்

Spread the love


உடற்குறையுள்ளோருக்கான தோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணியின் S-7 பிரிவு நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு சிங்கப்பூரின் தோ வெய் சூங் (Toh Wei Soong) தகுதிபெற்றுள்ளார்.

தகுதிச் சுற்றில் களமிறங்கிய அவர் இரண்டாம் நிலையில் வந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 29.90 விநாடிகள்.

முதல் இடத்தைக் கைப்பற்றிய அமெரிக்கர் எவன் ஆஸ்டின் (Evan Austin), 29.71 விநாடிகளில் போட்டியை முடித்தார்.

50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்று சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை சுமார் 5 மணிக்கு இடம்பெறும்.

22 வயது தோ உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாகக் கலந்துகொள்கிறார்.

இன்று நீச்சலில் மொத்தம் 16 இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: