உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இன்று… – TamilSeithi News & Current Affairs

Spread the love

இன்று உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளின் 7ஆவது நாள்.

போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல்

ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் டோ வெய் சூங் (Toh Wei Soong) 7ஆவது நிலையில் வந்தார்.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்கும் டோ, 28.65 விநாடிகளில் நீந்தி, புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

போட்டியில் உக்ரேனின் ஏண்ட்ரி ட்ருசோவ் (Andrii Trusov) முதலிடத்தைப் பிடித்தார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம், 27.43 விநாடி.

32 கிலோமீட்டர் சைக்கிளோட்டப் போட்டி

சிங்கப்பூரின் ஸ்டீவ் டீ (Steve Tee), சைக்கிள் சங்கிலி வளையம் உடைந்ததால், ஆண்களுக்கான 32 கிலோமீட்டர் சைக்கிளோட்டப் போட்டியை முடிக்கத் தவறினார்.

போட்டியில் தங்கத்தை வென்றார், பிரான்ஸின் அலெக்சாண்டிரே லொவெராஸ் (Alexandre Lloveras).

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 41 நிமிடம், 54.2 விநாடிகள்.

நெதர்லந்து வெள்ளியையும் ஸ்பெயின் வெண்கலத்தையும் வென்றன.

மகளிர் சைக்கிளோட்ட C5 போட்டி

மகளிர் சைக்கிளோட்ட C5 போட்டியில் பிரிட்டனுக்குத் தங்கம்.

36 நிமிடம், 8.90 விநாடிகளில் போட்டியை முடித்து சேரா ஸ்டோரி (Sarah Storey) முதலிடத்தில் வந்தார்.

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் வரலாற்றில் அவர் வென்றிருக்கும் 16ஆவது தங்கப் பதக்கம் இது.

அம்பெய்தல் போட்டி

ஆண்கள் அம்பெய்தல் போட்டியில் சீனாவின் ஹெ ஜிஹௌக்குத் (He Zihao) தங்கம்.

ஈரானின் ராமெஸான் பியாபானியுடன் (Ramezan Biabani) போட்டியிட்ட அவர், 147க்கு 143 என்னும் புள்ளிக் கணக்கில் வெற்றி இலக்கை எட்டினார்.

அம்பெய்தல் போட்டியில் சீனா வென்றிருக்கும் மூன்றாவது தங்கம் இது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: