உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: சீனாவுக்கு இன்று 3 தங்கப்பதக்கங்கள்

Spread the love


Images

  • para

    படம்: AP Images

தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, சீனா மூன்று தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றியது.

ஆண்களுக்கான 1,000 மீட்டர் சைக்கிளோட்டத்தில், சீனாவின் லீ சாங் யூ ( Li Zhangyu) முதல் இடத்தைப் பிடித்தார்.

பெண்கள் பிரிவின் 50 கிலோவுக்குக் கீழ்ப்பட்ட எடைதூக்கும் போட்டியில் மற்றுமொரு தங்கத்தைப் பெற்றுத் தந்தார், ஹூ டான் டான் (Hu Dandan)

T-35 போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தை 13 விநாடிகளில் முடித்து, சீனாவின் சௌ சியா புதிய சாதனை படைத்தார்.

2016ஆம் ஆண்டு தாம் பெற்ற தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டதுடன், சொந்தச் சாதனை நேரத்திலும் அரை விநாடி முன்னேற்றம் காட்டினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: