உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் – தீச்சுடர் ஏற்றப்பட்டது

Spread the loveImages

  • paralympics

    (படம்: AFP)

ஜப்பான் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டுத் தீச்சுடரை ஏற்றும் நிகழ்ச்சியை முதல்முறையாக நடத்தியுள்ளது.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை இம்மாதம் 24-ஆம் தேதி தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே,உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுச் சாலைகளில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் சுடர் அஞ்சலோட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக் சுடரை ஏந்தி விளையாட்டாளர்கள் அஞ்சலோட்டத்தில் ஈடுபடுவர் என்று கூறப்பட்டது.

விளையாட்டுகளை நேரடியாகக் காணப் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

அது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும்.

ஜப்பானில் கிருமிப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

தோக்கியோவிலும் மேலும் 5 வட்டாரங்களிலும் நெருக்கடிநிலை நடப்பில் உள்ளது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: