உடம்பைக் குளுகுளுவென்று வைத்துக்கொள்ள காற்றாடியுடன் மேலாடை

Spread the love


Images

  • fan shirt

    (படம்: Reuters)

ஜப்பானில் வெயில் கொளுத்துகிறது. இதனால் வெளியிடங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்குப் புதிய விதிமுறை.

குளுகுளு காற்றாடி பொருத்திய மேலாடைகளை அணிந்துகொண்டுதான் அவர்கள் பணிசெய்யவேண்டும்.

ஜப்பானின் Yomiuri Shimbun நாளேடு அதனைத் தெரிவித்துள்ளது.

அந்த மேலாடை பல ஆண்டுகளாக ஜப்பானில் புழக்கத்தில் உள்ளது. கட்டுமானம், தளவாடம் ஆகிய துறைகளில் பணியாற்றுவோர் அதனைப் பயன்படுத்துவதுண்டு.

அகற்றக்கூடிய ஒரு காற்றாடியையும், அதற்கான மின்கலனையும் மேலாடையில் பொருத்தமுடியும். அது காற்றை வெளியேற்றி உடலைக் குளிர்விக்கும். அதேசமயம் வியர்வையை ஆவியாய் மாற்றிவிடும்.

பொதுவாக மின்கலன்கள் ஒரு நாள் முழுவதும் தாக்குப்பிடிக்கும் என்று Yomiuri Shimbun நாளேட்டின் அறிக்கை குறிப்பிட்டது.

மேலாடை பிரபலமானதைத் தொடர்ந்து, பல்வேறு புதுப்புது வடிவங்களில் வெளியிட்டு அதை நவநாகரிக ஆடையாக்கிவிட்டன ஜப்பானிய ஆடை நிறுவனங்கள்.

அதன் விலை சுமார் 188 டாலர் (260 வெள்ளி).
 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *