இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைக்குமா: கடைசி 2 டெஸ்டில் பங்கேற்க

Spread the love


புதுடில்லி: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் பங்கேற்கும் இந்திய ‘லெவன்’ அணியில் இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமாக உள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், வரும் செப். 2ல் லண்டன், ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. கடைசி டெஸ்ட், மான்செஸ்டரில் செப். 10–14ல் நடக்கவுள்ளது.

சமீபத்தில் லீட்சில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்ததால், கடைசி இரு போட்டிக்கான இந்திய ‘லெவன்’ அணியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா முழங்காலில் காயமடைந்திருப்பதால் தமிழகத்தின் அஷ்வின் தேர்வாகலாம்.

மூன்றாவது டெஸ்டில் வேகத்தில் ஏமாற்றிய சீனியர் இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்போட்டியில் 22 ஓவர் வீசிய இவர், 92 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. தவிர இவர், இத்தொடரில் பங்கேற்ற 2 டெஸ்டில் (56 ஓவர்), 174 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சக வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா (14 விக்கெட், 108 ஓவர், 3 டெஸ்ட்), முகமது சிராஜ் (13 விக்கெட், 100.5 ஓவர், 3 டெஸ்ட்), முகமது ஷமி (11 விக்கெட், 96.5 ஓவர், 3 டெஸ்ட்) ஓரளவு நம்பிக்கை தந்தனர்.

எனவே இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்படலாம். ஷர்துல் தாகூர் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். ஆனால் ‘வேகத்தில்’ உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். ஒருவேளை பும்ரா அல்லது ஷமிக்கு ஓய்வு வழங்கினால், ஷர்துல், உமேஷ் இருவரும் தேர்வாகலாம். இறுதி முடிவு கேப்டன் கோஹ்லி கையில் தான் உள்ளது.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: