இலங்கை நிதான ஆட்டம்

Spread the love


ஆன்டிகுவா: விண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 354 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு கேப்டன் திமுத் கருணாரத்னே (1) ஏமாற்றினார். லகிரு திரிமன்னே (55) அரைசதம் கடந்து கைகொடுக்க, 2ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (34), தனஞ்செயா (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று, 3ம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்த போது கேப்ரியல் பந்தில் சண்டிமால் (44) அவுட்டானார். பிளாக்வுட் ‘சுழலில்’ தனஞ்செயா (39) சிக்கினார்.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 189 ரன் எடுத்து, 165 ரன் பின்தங்கி இருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. நிரோஷன் டிக்வெல்லா (9), பதுன் நிசங்கா (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *