இலங்கை, சிங்கப்பூர் வீரர்கள் தேர்வு: ஐ.பி.எல்., பெங்களூரு அணியில்

Spread the love

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடருக்கான பெங்களூரு அணியில் இலங்கையின் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டேவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் துவங்குகின்றன. இதில் இடம் பெற்றுள்ள பெங்களூரு அணியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா, டேனியல் சாம்ஸ் விலகினர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்தது.

இவர்களுக்கு பதிலாக சமீபத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை ‘சுழல்’ வீரர் வணிந்து ஹசரங்கா (7 விக்கெட்), வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா (4 விக்கெட்) தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல நியூசிலாந்தின் பின் ஆலனுக்கு பதிலாக சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் வாய்ப்பு பெற்றார். இதன்மூலம் ஐ.பி.எல்., தொடருக்கு தேர்வான முதல் சிங்கப்பூர் சர்வதேச கிரிக்கெட் வீரரானார்.

பயிற்சியாளர் விலகல்: பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் சைமன் காடிச், சொந்த காரணங்களுக்காக பதவி விலகினார். இவருக்கு பதிலாக, அந்த அணியின் இயக்குனர் மைக் ஹெசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி எப்போது: பெங்களூரு அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர், நிர்வாகிகள், நேற்று பெங்களூருவில் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்திக் கொண்டனர். இக்கால கட்டத்தில் இவர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் தேறியவர்கள் மட்டும், வரும் ஆக. 29ல் தனிவிமானம் மூலம் எமிரேட்ஸ் செல்வர். அங்கு, 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின், பயிற்சியை துவக்குவர்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: