இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த புதிய பிரேரணை மிகமுக்கியமானது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Spread the love

Published by T. Saranya on 2021-03-26 13:55:32

(நா.தனுஜா)

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய பிரேரணை மிகமுக்கியமானதாக விளங்குகின்றது. 

நாடொன்றில் நீதி மறுக்கப்படும் பட்சத்தில், கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் என்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *