இலங்கையின் தப்புக் கணக்கு | Virakesari.lk

Spread the love

-கார்வண்ணன்

“இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சிகளை திரட்டி பாதுகாக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்காக, 2.85 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுவது, மிகையான – தேவையற்ற செலவாக சில நாடுகள் கூறுவது தான் விநோதம்”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம், இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

A/HRC/46/L.1/ Rev.1 என்ற தீர்மானம், இந்தப் பொறிமுறையை உருவாக்கிச் செயற்படுத்துமாறு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஆணையை வழங்கியிருக்கிறது.

2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர் தொடர்பான விடயங்களை ஆராய நியமிக்கப்படுகின்ற மூன்றாவது சர்வதேச பொறிமுறை இதுவாகும்.

முன்னதாக. ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் 2010 இல், மர்சுகி தருஸ்மன் தலைமையிலான, மூவர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தார்.

அந்தக் குழு, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா? என்று ஆராய்ந்து, ஐ.நா. பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் அறிக்கையை மையப்படுத்தியே, இலங்கைக்கு எதிரான பொறுப்புக்கூறல் நகர்வுகள் ஜெனிவாவின் ஊடாக, இதுவரை காலமும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விவகாரம் ஜெனிவாவுக்கு சென்ற பின்னர், உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு இலங்கையிடம் கேட்கப்பட்டது.

அதற்கான எந்த நகர்வும் முன்னெடுக்கப்படாமல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், விசாரணைகளை முன்னெடுக்குமாறு, 2014ஆம் ஆண்டு தீர்மானத்தில் ஆணை வழங்கப்பட்டது. 

அந்த ஆணைக்கு அமைய, மார்டி அதிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரைக் கொண்ட ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையின் படியும், போரின்போது மனித உரிமைச் சட்டங்கள்,  மனிதாபிமானச் சட்ட மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், 2015ஆம் ஆண்டு, கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

அப்போதைய இலங்கை அரசாங்கம் அதனை ஒப்புக் கொண்டு விட்டு, காலத்தை இழுத்தடித்து கைவிட்டு விட்டது.

இந்தநிலையில்தான், இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கும், ஐ.நா. பொதுச்சபை அல்லது பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், சிரியா அல்லது மியான்மாரில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்டதுபோன்று –  IIM அல்லது IIIM என்ற – சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆயினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில், சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்ற பதம் மிக கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே, இவ்வாறு தவிர்க்கப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *