இலங்கைக்கு ரூ. 107 கோடி லாபம் * இந்திய தொடரில் வருமானம்

Spread the love

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான தொடர் காரணமாக இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு (எஸ்.எல்.சி.,) ரூ. 107 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இலங்கை சென்ற ஷிகர் தவான் தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி ஒருநாள் தொடரை 2–1 என வென்றது. குர்னால் பாண்ட்யாவுக்கு ஏற்பட்ட கொரோனா காரணமாக இந்திய அணியில் 8 வீரர்கள் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் இந்தியா ‘டுவென்டி–20’ தொடரை 1–2 என இழந்தது.

இருப்பினும், இத்தொடர் காரணமாக எஸ்.எல்.சி.,க்கு ரூ. 107 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து எஸ்.எல்.சி., செயலர் மோகன் டி சில்வா கூறியது:

வழக்கமான போட்டி அட்டவணைப்படி இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டும் பங்கேற்க இருந்தது. ஆனால் எஸ்.எல்.சி., தலைவர் ஷம்மி சில்வா பேசியதன் அடிப்படையில் கூடுதலாக 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. இதனால் வர்த்தக மதிப்பு அதிகரித்தது. நேரடி ஒளிபரப்பு, மைதான விளம்பர உரிமை உட்பட பல்வேறு வழிகளில் எங்களுக்கு ரூ. 107 கோடி வருமானம் கிடைத்தது. இந்த மோசமான பேரிடர் காலங்களிலும், இந்திய அணி இலங்கை வந்தது. இந்திய கிரிக்கெட் போர்டுடன் கொண்ட நட்புறவு காரணமாக இது சாத்தியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: