இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் சில உணவு வகைகள்

Spread the love


Images

  • vege

இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவது, பெரும் பிரச்சினையாக உள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் நம் வாழ்க்கை முறையும், நம் உணவு முறையும் என்று கூடக் கூறலாம்.

இரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் சில உணவு வகைகள்:

1. ஓட்ஸ் (Oats) : ஓட்ஸில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் அது கொழுப்பு அளவைக் குறைக்கும்.

2. பீன்ஸ் : பீன்ஸில் கரையக்கூடிய நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளதால் அது இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும்.

3. பயறு வகைகள்: பயறு வகைகளில் புரதம், கால்சியம், பொட்டாஷியம் இருப்பதால் அவை இரத்தக் குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன.

4. மீன் வகைகள் : மீன்களில் omega-3 அமிலங்கள் இருப்பதால் அவை இரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

5. மஞ்சள்: இந்திய உணவுப் பாரம்பரியத்தில் மஞ்சளுக்குத் தனி இடம் உண்டு. மஞ்சளில் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் (anti-oxidant) இருப்பதால் அது உடலில் கொழுப்பைப் படியவிடாது.

6. உருளைக் கிழங்கு:
உருளைக் கிழங்கில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் அது இரத்தக் குழாய்களுக்கு பலத்தைக் கொடுக்கும்.
(ஆனால், உருளைக் கிழங்கை எண்ணெயில் பொரித்து உண்ணக்கூடாது )

7. பச்சைத் தேநீர் : (Green Tea)
பச்சைத் தேநீர் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். EGCG என்னும் கலவை அதில் இருப்பதால் இரத்தக் குழாய்களில் அது கொழுப்புகளைக் கரைக்க உதவும். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *