Spread the love
Images
இந்தோனேசிய தேவாலயத்துக்கு வெளியே தற்கொலைத் தாக்குதலை நடத்திய இருவரும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி என்று காவல்துறை கூறியுள்ளது.
தேவாலய வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் அவர்கள் நுழைந்ததாகவும் தற்கொலைக் குண்டுவெடிப்பில் சந்தேகநபர்கள் இருவரும் உடனடியாகக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அந்தத் தம்பதிக்குத் திருமணமாகி சுமார் 6 மாதங்கள் ஆகிவிட்டதாகவும், ஆடவருக்குச் சுமார் 25 வயது இருக்கும் என்றும் இந்தோனேசிய அதிகாரிகள் கூறினர்.
தாக்குதலில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை தொடர்கிறது
என்று காவல்துறைப் பேச்சாளர் ஆர்கோ
யுவோனோ (Argo Yuwono) கூறினார்.