இந்தோனேசிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

Spread the loveஇந்தோனேசியாவின் மக்காசார் நகரில் தேவாலயத்துக்கு வெளியே நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலை சிங்கப்பூர் கண்டித்துள்ளது.

அப்பாவிப் பொதுமக்கள் மீதும் வழிபாட்டு இடங்கள் மீதும் வன்முறை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

நேற்றுக் காலை கத்தோலிக்க தேவாலயத்துக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில், சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

ஆக அண்மை நிலவரப்படி, மருத்துவமனயில்
15 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எஞ்சியோர் வீடு திரும்பியுள்ளனர்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய அமைச்சு வாழ்த்துத் தெரிவித்தது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான இந்தோனேசிய அரசாங்கத்தின்
முயற்சிகளை ஆதரிப்பதாகவும் அது சொன்னது.

தாக்குதலில் சிங்கப்பூரர்கள் யாரும் காயமடையவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள், அண்மையில் மணம்புரிந்த தம்பதி என்றும் ஜமாஆ அன்ஷாருட் டவுலா (Jamaah Ansharut Daulah) எனும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் தொடர்பில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *