இந்தோனேசியாவின் ஜக்கர்த்தா நகரிலுள்ள காவல்துறைத் தலைமையகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவரை இந்தோனேசியக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
தாக்குதல் நடத்திய அந்த 25 வயதுப்பெண் தனியாகச் செயல்பட்டதாகவும் IS தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தைப் பின்பற்றியதாகவும் காவல்துறைத் தலைமை அதிகாரி லிஸ்டியோ சிகிட் பிரபோவோ (Listyo Sigit Prabowo) கூறினார்.
நேற்று (மார்ச் 31) மதியம் சுமார் 4.30 மணியளவில், அவர் தலைமையகக் கட்டடத்தின் வாயிலை நோக்கி நடந்தார்.
அவர் 6 முறை துப்பாக்கியால் சுட்டார். காவல்துறை அதிகாரிகள் பதிலுக்குச் சுட்டனர்.
அந்தப் பெண்ணின் Instagram பக்கத்தில், தாக்குதலுக்கு முன் கடைசியாக IS அமைப்பின் கொடியின் படம் பதிவேற்றம் செய்யப்பட்டதாகத் திரு பிரபோவோ குறிப்பிட்டார்.
அவர் ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவரா என்ற சாத்தியம் குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.