இந்துமதி… சூப்பர் ஸ்டார், ரோல் மாடல்… இன்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன்! | Indumathi the captain of Indian football team should be appreciated more

Spread the love


“நாளைக்கு பொண்ணுகளுக்கு ஒரு அகாடெமி ஆரம்பிக்கிறோம்னு வைங்க, அவங்க பேரன்ட்ஸ் வந்து என் பொண்ணுக்கு இதுல என்ன எதிர்காலம் இருக்குதுனு கேப்பாங்க. அவங்களுக்கு என்னால என்ன பதில் சொல்ல முடியும்? இந்த மாதிரி சோகம் கிரிக்கெட்ல நடக்காது. அங்க ஒரு சீசன் நல்லா ஆடிட்டாலே அவங்களால செட்டில் ஆகிட முடியுது. ஆனா, இங்க அப்படி இல்லயே” என்று சொல்லும் விஜயனின் வார்த்தைகளில் அவ்வளவு உண்மை!

அவர் இந்துமதிக்காக மட்டும் பேசவில்லை. இந்துமதியின் அங்கீகாரத்துக்காக மட்டும் பேசவில்லை. அடுத்த தலைமுறைக்காகவும்தான் பேசுகிறார். ஏனெனில், இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வீரனின்/வீராங்கனையின் வெற்றி இளம் தலைமுறையை ஊக்குவித்துவிடும். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும், வாழ்வாதாரமும்தான் அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களை சமாதானம் செய்யும். அந்தத் துறையில் சாதித்த ஒருவர் எந்தவித பொருளாதார சிக்கலும் இல்லாமல், அவருக்கு உரிய அங்கீகாரம் பெறும்போதுதான், அது தங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்று நம்புவார்கள். அவர்களை விளையாட விடுவார்கள். இங்கு இந்துமதிக்கான அங்கீகாரம், தனி ஒருவருக்கானது மட்டுமில்லை. ஒரு விளையாட்டுக்கானது, ஒரு தலைமுறைக்கானது. அதுவும் தனி ஒரு ஆளாக, இந்த மாநிலத்தில், இந்த விளையாட்டில் ஒரு தாக்கம் ஏற்படுத்தியிருப்பவருக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்தால், அது மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும்!THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *