இந்துக் கடவுளின் உருவம் கொண்ட சங்கிலியை அணிந்த அமெரிக்கப் பாடகி – குறைகூறும் இந்தியர்கள்

Spread the love


Images

  • rihanna

    (படம்: Reuters)

அமெரிக்கப் பாடகி ரிஹானா (Rihanna) இந்துக்கடவுள் கணேசனின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தை சங்கிலியில் அணிந்ததை அடுத்து, அவர் இந்துக் கடவுளைக் கேலி செய்துள்ளதாகக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

தாம் விற்பனை செய்யும் உள்ளாடைகளின் விளம்பரப் படத்தை ரிஹானா Instagram, Twitter பக்கங்களில் பதிவுசெய்துள்ளார்.

அந்தப் படத்தில் இந்துக்கடவுள் கணேசனின் உருவத்துடன் கூடிய பதக்கத்தை அவர் அணிந்திருந்தார்.

சமூகத் தளப் பயனீட்டாளர்களும் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ரிஹானாவின் பதிவு இழிவுபடுத்துவதாகவும் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாகவும் கூறினர்.

அது குறித்துக் கருத்துரைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, நிலவரம் என்னவென்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியது. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *