இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு

Spread the loveஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் அரசியல்வாதிகள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

புதுடெல்லி:

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.

என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *