இந்திய வீரருக்கு அனுமதி * கால்பந்து விளையாட…

Spread the love

புதுடில்லி: இந்திய கால்பந்தின் இளம் வீரர் அன்வர் அலி 21. கடந்த 2017 ‘பிபா’ உலக கோப்பை (17 வயது) தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். ஐ.எஸ்.எல்., தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். ஆனால், இவரது இருதய சுவர் தசைகள், வழக்கத்துக்கு மாறாக கடினமாக இருந்தது 2019ல் தெரியவந்தது. இதனால் ரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு ‘பம்ப்’ செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. வேகமாக உடற்பயிற்சி செய்வது, அதிக வெப்பமான சூழல் காரணமாக அன்வர் அலி உயிருக்கு ஆபத்து ஏற்படும். 

தவிர இந்த குறைபாடுள்ள வீரர்களுக்கு மைதானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளன என்பதால், அன்வர் அலி கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுக்குப் பின் தற்போது அன்வர் அலிக்கு அனுமதி கிடைத்தது.

 இதுகுறித்து வெளியான அறிக்கையில்,‘அகில இந்திய கால்பந்து மருத்துவ குழு அறிக்கையின் படி, அன்வர் அலி போட்டிகளில் பங்கேற்க அனுமதி தரப்படுகிறது. அதேநேரம் தனது மருத்துவ காரணங்களை தெரிவித்து, சொந்த விருப்பத்தின் பேரில் விளையாடுவதாக சான்றிதழ் கொடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளது. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: