‘‘இந்திய விளையாட்டுத் துறைக்கு இது சிறப்பான தருணம்’’- பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள்; பிரதமர் மோடி பெருமிதம் | Avani Lekhara becomes first Indian woman

Spread the love


டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர்நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் “அபராமான விளையாட்டு அவனி லெகாரா @AvaniLekhara! உங்கள் கடின உழைப்பினால் உங்களுக்குத் தகுதியான தங்கத்தை வென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் சுறுசுறுப்பான தன்மையினாலும், துப்பாக்கிச் சுடுதல் மீதான உங்கள் ஆர்வத்தின் காரணமாகவுமே இது சாத்தியமானது. இந்திய விளையாட்டுத் துறைக்கு உண்மையிலேயே இது ஒரு சிறப்பான தருணம். உங்களது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். #Paralympics”, என்று கூறியுள்ளார்.

இதுபோலவே டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தில், “தேவேந்திர ஜஜாரியா @DevJhajharia அபாரமாக விளையாடியுள்ளார்! அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

தேவேந்திரன் இந்தியாவை தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். #Paralympics”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் வாழ்த்துச் செய்தில் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாரை பாராட்டியுள்ளார்.

அந்த வாழ்த்து செய்தில் “சுந்தர் சிங் குர்ஜார் @SundarSGurjar வெண்கலப் பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெரும் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் தந்து விளையாட்டில் காட்டியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் #Paralympics”, என்று கூறியுள்ளார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: