இந்திய வம்சாவளிக்கு 3 ஆண்டுகள் சிறை| Dinamalar

Spread the love


சிங்கப்பூர்:சிங்கப்பூரில், அரசு நிதி மோசடி வழக்கில், இந்திய வம்சாவளி, ‘மேஜிக்’ கலைஞருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசிய நாடான சிங்கப்பூரில், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கான முதலீட்டு திட்டம், அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தில் இருந்து, 2014ல் சிலர் மோசடியாக நிதி பெறுவதற்கு, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த, சந்திரன் என்பவர் உதவியுள்ளார்.அந்நாட்டின் பிரபல ‘மேஜிக்’ கலைஞரான சந்திரன், ஒரு ‘கன்சல்டன்சி’ நிறுவனமும் நடத்தி வந்தார்.

இந்நிறுவனம் வாயிலாக, போலி ஆணவங்கள் தாக்கல் செய்து, 40 லட்சம் ரூபாய் அரசு நிதியை, சிலருக்கு மோசடியாக பெற்றுக்கொடுத்துள்ளார். இதற்காக மோசடி தொகையில், 50 சதவீதத்தை கமிஷனாக பெற்றுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்திரனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும், 1.60 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பு வழங்கியது.

அபராதம் செலுத்த தவறினால், அவர் மேலும், 30 வாரங்கள் சிறையில் இருக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறிய சந்திரனுக்கு, 1.08 கோடி ரூபாய் ரொக்க ஜாமின் வழங்கப்பட்டது.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: