இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * ஆஸி., தொடருக்கு தயார்

Spread the love

பெங்களூரு: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி (செப்.,–அக்.,) மூன்று ஒருநாள், ஒரு பகலிரவு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீராங்கனைகள் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ரயில்வேயை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் மேக்னா சிங், பரோடாவின் யஸ்திகா மூன்று வித அணியிலும் சேர்க்கப்பட்டனர். ‘டுவென்டி–20’ அணியில் இமாசல பிரதேசத்தை சேர்ந்த ரேணுகா 25, இடம் பெற்றார். காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இடம் பெறாத ராஜேஸ்வரி அணிக்கு திரும்பினார். 

18 பேர் கொண்ட டெஸ்ட், ஒருநாள் அணிக்கு மிதாலி ராஜ், 17 பேர் கொண்ட ‘டுவென்டி–20’ அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தொடர்கின்றனர். 

அணி விபரம்:

* டெஸ்ட், ஒருநாள் அணி

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் (துணைக் கேப்டன்), தீப்தி சர்மா, மேக்னா, ஸ்னே ராணா, பூஜா, ஸ்மிருதி மந்தனா, யஸ்திகா, ராஜேஸ்வரி, ஷபாலி, தானியா, பூனம் யாதவ், பூனம் ராத், ஷிகா பாண்டே, ரிச்சா கோஷ், ஜெமிமா, ஜுலன் கோஸ்வாமி, ஏக்தா பிஷ்ட்.

* ‘டுவென்டி–20’ அணி

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி, ஜெமிமா, தீப்தி சர்மா, ஸ்னே ராணா, யஸ்திகா, ஷிகா பாண்டே, மேக்னா, பூஜா, ராஜேஸ்வரி, பூனம் யாதவ், ரிச்சா கோஷ், ஹர்லீன், அருந்ததி, ராதா, ரேணுகா. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: