இந்திய பருத்திக்கு விதித்த தடையை நீக்க பாக்., முடிவு| Dinamalar

Spread the love


இஸ்லாமாபாத்:இந்தியாவில் இருந்து, பருத்தி இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், என, பாக்., ஜவுளி அமைச்சகம், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த, 2019ல், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து, இந்தியா உடனான வர்த்தகத்திற்கு, பாக்., தடை விதித்தது. இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட, பாக்., முயன்றது. அதில் தோல்வியை தழுவியது.

வேறு வழியின்றி, கொரோனா பரவலை சமாளிக்க, 2020, மே மாதம், இந்திய மருந்துகள் மற்றும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு விதித்த தடையை, பாக்., நீக்கியது. இந்நிலையில், இந்திய பருத்திக்கு விதித்துள்ள தடையை நீக்க, பாக்., பிரதமரும், ஜவுளி துறை அமைச்சருமான இம்ரான் கான் தலைமையிலான குழு, அந்நாட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து, பாக்., அமைச்சரவை ஒப்புதலுடன், இந்திய பருத்தி இறக்குமதி மீதான தடை நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானில், பருத்தி மற்றும் நுாலிழை உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனால், ஜவுளி துறையினர், இந்தியாவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இந்திய பருத்தி இறக்குமதிக்கு தடை நீக்கப்பட உள்ளது.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *