இந்திய அணி ‘டிரா’ * நட்பு கால்பந்தில் ஏமாற்றம்

Spread the love

காத்மண்டு: சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இன்று இந்தியா, நேபாள அணிகள் மோதுகின்றன.

தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் வரும் அக். 3–13ல் மாலத்தீவில் நடக்கவுள்ளது. இந்தியா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் என ஐந்து அணிகள் மோதவுள்ளன.

இதற்குத் தயாராகும் வகையில் நேபாளம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட நட்பு கால்பந்து தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி, நேபாளத்தின் தசராத் ரங்கசாலா மைதானத்தில் நேற்று நடந்தது.

போட்டியின் 34 வது நிமிடம் நேபாள அணி வீரர் பிஸ்டா, ஒரு கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதியில் இந்திய அணி 0–1 என்ற கணக்கில் பின்தங்கியது. அடுத்த இரண்டாவது பாதியில் 46 வது நிமிடத்தில் அனிருத் தபா உட்பட ஒரே நேரத்தில் இந்திய அணியில் நான்கு மாற்று வீரர்கள் களமிறங்கினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

போட்டியின் 60 வது நிமிடத்தில் அனிருத் தபா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதன் பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி செப். 5ல் நடக்கிறது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: