இந்திய அணியில் அஷ்வின்: இயான் சாப்பல் ஆலோசனை

Spread the love

சிட்னி: ‘‘அஷ்வின் சிறந்த பவுலர். அனைத்து சூழ்நிலையிலும் அசத்தக்கூடியவர். இவருக்கு இந்திய ‘லெவனில்’ வாய்ப்பு அளிக்க வேண்டும்,’’என இயான் சாப்பல் வலியுறுத்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் கோஹ்லி முன்னுரிமை அளித்தார். இங்கிலாந்து தொடரில் 7 இன்னிங்சில் வெறும் 109 ரன்கள்(சராசரி 15.57) எடுத்த துணை கேப்டன் ரகானே அணியில் நீடித்தது புரியாத புதிராக இருந்தது. 

 

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் கூறியது: கிரிக்கெட் அரங்கில் இந்தியா சிறந்த அணியாக திகழ்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற்று திறமையை நிரூபித்தது. சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. இருப்பினும் இன்னும் முன்னேற்றம் காணலாம். அணியில் சில மாற்றம் செய்யலாம். 

 

இந்தியாவின் வெற்றிக் கூட்டணியில் அஷ்வினுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும். சிறந்த பவுலரான இவர், ஆஸ்திரேலியா உட்பட அனைத்து இடங்களிலும் அசத்தியுள்ளார். இவரை சேர்ப்பதற்காக ‘மிடில் ஆர்டரை’ மாற்றலாம். ஜடேஜா, ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின் என்ற வரிசையில் இருந்தால் நல்லது. 

 

துணை கேப்டன் ரோகித்: ‘பேட்டிங் ஆர்டரில்’ 5வது இடத்தில் ரகானேவுக்கு பதிலாக ஜடேஜாவை அனுப்பலாம். 5வது இடத்தில் தேவைப்பட்டால் ரிஷாப், ஹர்திக் பாண்ட்யாவையும் களமிறக்கலாம். இவர்களால் விரைவாக ரன் சேர்க்க முடியும். ரகானேவை நீக்கினால், ‘ஸ்லிப்’ பகுதி ‘பீல்டிங்’ மட்டுமே பலவீனமடையும். இவரிடம் உள்ள துணைக் கேப்டன் பதவியை ரோகித் சர்மா வசம் ஒப்படைக்கலாம். 

 

இவ்வாறு இயான் சாப்பல் கூறினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: