இந்தியா–பாக்., மோதல் * வெளியானது உலக கோப்பை அட்டவணை

Spread the love

துபாய்: உலக கோப்பை ‘டுவென்டி–20’ அட்டவணை வெளியானது. குரூப் ‘பி’ முதல் மோதலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

இந்தியாவில் நடக்க இருந்த 7வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனுக்கு (அக். 17 – நவ. 14) மாற்றப்பட்டது. 16 அணிகள் ‘ரவுண்டு–1’, ‘சூப்பர்–12’ என, இரண்டு சுற்றுகளாக விளையாடுகின்றன.

தரவரிசை (2021, மார்ச் 20) அடிப்படையில் இந்தியா, விண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என, 8 அணிகள் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றன. இதில் இந்திய அணி, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ‘குரூப்–2’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே, நேற்று உலக கோப்பை இறுதி அட்டவணை வெளியானது. அக்., 23ல் பிரதான சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் ஆஸ்திரேலியா–தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து–விண்டீஸ் மோதுகின்றன.

அக்., 24ல் துவங்கும் ‘சூப்பர்–12’ சுற்று குரூப் ‘பி’ போட்டி இந்தியா, பாகிஸ்தான் மோதலுடன் துவங்குகிறது. இப்போட்டி துபாயில் நடக்கவுள்ளது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து (அக்., 31), ஆப்கானிஸ்தானை (நவ. 3) எதிர்கொள்ளும். கடைசி இரு போட்டிகளில் இந்திய அணி (நவ. 5, 8), தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறும் அணிகளுடன் மோதும். அரையிறுதி போட்டிகள் நவ. 10 (அபுதாபி), 11ல் (துபாய்) நடக்கும். நவ. 14ல் பைனல் துபாயில் நடக்கவுள்ளது. நவ. 15, ‘ரிசர்வ் டே’ ஆக அறிவிக்கப்பட்டது.

 

முதல் மோதல்

மொத்தம் 8 அணிகள் மோதும் ‘ரவுண்டு–1’ (தகுதிச்சுற்று) போட்டிகள் அனைத்தும் ஓமனில் நடக்கவுள்ளன. அக். 17ல் துவங்கும் முதல் மோதலில் ஓமன்–பப்புவா நியூ கினியா, வங்கதேசம்–ஸ்காட்லாந்து மோதுகின்றன. முடிவில் ‘ஏ’, ‘பி’ பிரிவில் முதல் இரு இடம் பெறும் அணிகள் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு முன்னேறும். மற்ற 4 அணிகள் வெளியேறும்.

 

இந்தியா மோதும் போட்டிகள்

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் ‘சூப்பர்–12’ சுற்றில் இந்திய அணி ‘குரூப் 2’ ல் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விபரம்:

தேதி அணிகள் இடம் நேரம்

அக். 24 இந்தியா–பாகிஸ்தான் துபாய் இரவு 7:30 மணி

அக். 31 இந்தியா–நியூசிலாந்து துபாய் இரவு 7:30 மணி

நவ. 3 இந்தியா–ஆப்கானிஸ்தான் அபுதாபி இரவு 7:30 மணி

நவ. 5 இந்தியா–பி 1 துபாய் இரவு 7:30 மணி

நவ. 8 இந்தியா–ஏ 2 துபாய் மதியம் 3:30 மணி

 

அட்டவணை

‘ரவுண்டு–1’ (தகுதிச்சுற்று)

‘ஏ’ பிரிவு: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா

‘பி’ பிரிவு: வங்கதேசம், பப்புவா நியூ கினியா, ஓமன், ஸ்காட்லாந்து

தேதி பிரிவு அணிகள் இடம் நேரம்

அக். 17 ‘பி’ ஓமன்–பப்புவா அல் அமீரட் மதியம் 3:30 மணி

அக். 17 ‘பி’ வங்கதேசம்–ஸ்காட்லாந்து அல் அமீரட் இரவு 7:30 மணி

அக். 18 ‘ஏ’ அயர்லாந்து–நெதர்லாந்து அபுதாபி மதியம் 3:30 மணி

அக். 18 ‘ஏ’ நமீபியா–இலங்கை அபுதாபி இரவு 7:30 மணி

அக். 19 ‘பி’ பப்புவா–ஸ்காட்லாந்து அல் அமீரட் மதியம் 3:30 மணி

அக். 19 ‘பி’ ஓமன்–வங்கதேசம் அல் அமீரட் இரவு 7:30 மணி

அக். 20 ‘ஏ’ நமீபியா–நெதர்லாந்து அபுதாபி மதியம் 3:30 மணி

அக். 20 ‘ஏ’ அயர்லாந்து–இலங்கை அபுதாபி இரவு 7:30 மணி

அக். 21 ‘பி’ வங்கதேசம்–பப்புவா அல் அமீரட் மதியம் 3:30 மணி

அக். 21 ‘பி’ ஓமன்–ஸ்காட்லாந்து அல் அமீரட் இரவு 7:30 மணி

அக். 22 ‘ஏ’ அயர்லாந்து–நமீபியா சார்ஜா மதியம் 3:30 மணி

அக். 22 ‘ஏ’ இலங்கை–நெதர்லாந்து சார்ஜா இரவு 7:30 மணி

‘சூப்பர்–12’ சுற்று

குரூப் 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, விண்டீஸ், ‘ஏ 1’, ‘பி 2’

குரூப் 2: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ‘பி 2’, ‘ஏ 2’

தேதி குரூப் அணிகள் இடம் நேரம்

அக். 23 ‘குரூப் 1’ ஆஸ்திரேலியா–தென் ஆப்ரிக்கா அபுதாபி மதியம் 3:30 மணி

அக். 23 குரூப் 1’ இங்கிலாந்து–விண்டீஸ் துபாய் இரவு 7:30 மணி

அக். 24 ‘குரூப் 1’ ஏ 1–பி 2 சார்ஜா மதியம் 3:30 மணி

அக். 24 ‘குரூப் 2 இந்தியா–பாகிஸ்தான் துபாய் இரவு 7:30 மணி

அக். 25 ‘குரூப் 2’ ஆப்கானிஸ்தான்–பி 1 சார்ஜா இரவு 7:30 மணி

அக். 26 ‘குரூப் 1’ தென் ஆப்ரிக்கா–விண்டீஸ் துபாய் மதியம் 3:30 மணி

அக். 26 ‘குரூப் 2’ பாகிஸ்தான்–நியூசிலாந்து சார்ஜா இரவு 7:30 மணி

அக். 27 ‘குரூப் 1’ இங்கிலாந்து–பி 2 அபுதாபி மதியம் 3:30 மணி

அக். 27 ‘குரூப் 2’ பி 1–ஏ 2 அபுதாபி இரவு 7:30 மணி

அக். 28 ‘குரூப் 1’ ஆஸ்திரேலியா–ஏ 1 துபாய் மதியம் 3:30 மணி

அக். 29 ‘குரூப் 1’ விண்டீஸ்–பி 2 சார்ஜா மதியம் 3:30 மணி

அக். 29 ‘குரூப் 2’ பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் துபாய் இரவு 7:30 மணி

அக். 30 ‘குரூப் 1’ தென் ஆப்ரிக்கா–ஏ 1 சார்ஜா மதியம் 3:30 மணி

அக். 30 ‘குரூப் 1’ ஆஸ்திரேலியா–இங்கிலாந்து துபாய் இரவு 7:30 மணி

அக். 31 ‘குரூப் 2’ ஆப்கானிஸ்தான்–ஏ 2 அபுதாபி மதியம் 3:30 மணி

அக். 31 ‘குரூப் 2 இந்தியா–நியூசிலாந்து துபாய் இரவு 7:30 மணி

நவ. 1 ‘குரூப் 1’ இங்கிலாந்து–ஏ 1 சார்ஜா இரவு 7:30 மணி

நவ. 2 ‘குரூப் 1’ தென் ஆப்ரிக்கா–பி 2 அபுதாபி மதியம் 3:30 மணி

நவ. 2 ‘குரூப் 2’ பாகிஸ்தான்–ஏ 2 அபுதாபி இரவு 7:30 மணி

நவ. 3 ‘குரூப் 2 நியூசிலாந்து–பி 1 துபாய் மதியம் 3:30 மணி

நவ. 3 ‘குரூப் 2 இந்தியா–ஆப்கானிஸ்தான் அபுதாபி இரவு 7:30 மணி

நவ. 4 ‘குரூப் 1’ ஆஸ்திரேலியா–பி 2 துபாய் மதியம் 3:30 மணி

நவ. 4 ‘குரூப் 1’ விண்டீஸ்–ஏ 1 அபுதாபி இரவு 7:30 மணி

நவ. 5 ‘குரூப் 2 நியூசிலாந்து–ஏ 2 சார்ஜா மதியம் 3:30 மணி

நவ. 5 ‘குரூப் 2 இந்தியா–பி 1 துபாய் இரவு 7:30 மணி

நவ. 6 ‘குரூப் 1’ ஆஸ்திரேலியா–விண்டீஸ் அபுதாபி மதியம் 3:30 மணி

நவ. 6 ‘குரூப் 1’ இங்கிலாந்து–தென் ஆப்ரிக்கா சார்ஜா இரவு 7:30 மணி

நவ. 7 ‘குரூப் 2 நியூசிலாந்து–ஆப்கானிஸ்தான் அபுதாபி மதியம் 3:30 மணி

நவ. 7 ‘குரூப் 2’ பாகிஸ்தான்–பி 1 சார்ஜா இரவு 7:30 மணி

நவ. 8 ‘குரூப் 2 இந்தியா–ஏ 2 துபாய் மதியம் 3:30 மணி

நவ. 10 அரையிறுதி அபுதாபி இரவு 7:30 மணி

நவ. 11 அரையிறுதி துபாய் இரவு 7:30 மணி

நவ. 14 பைனல் துபாய் இரவு 7:30 மணி

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: