இந்தியா – பாக்., உறவு; சீன அரசு மகிழ்ச்சி

Spread the love


பீஜிங் : “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்,” என, சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி, தாக்குதல்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், பிப்., 25ம் தேதி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் சம்மதம் தெரிவித்தன. இதனால், எல்லைப் பகுதியில், தற்போது பதற்றம் குறைந்துள்ளது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அமைதி நடவடிக்கைக்கு, சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

latest tamil news

இதுகுறித்து, சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று, கூறியதாவது:இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நேர்மறையான தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகளால், மகிழ்ச்சியடைந்துள்ளோம். பழையவற்றை மறந்து, வளர்ச்சியை நோக்கிச் செல்லவேண்டும். பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: