இந்தியாவுக்கு விளையாட மறுப்பு * சுமித் நாகல் மீது கோபம்

Spread the love

புதுடில்லி: டேவிஸ் கோப்பை தொடரில் இளம் வீரர்கள் சுமித் நாகல், சசிக்குமார் முகுந்த் என இருவரும் இந்தியாவுக்காக விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

டேவிஸ் கோப்பை தொடரில் இந்தியா, பின்லாந்து அணிகள் செப். 18–20ல் மோதவுள்ளன. இதற்கான இந்திய அணியில் இளம் வீரர் சுமித் நாகல் 24, சேர்க்கப்பட்டார். ஆனால் இடுப்பு பகுதி காயத்தால் இந்திய அணிக்காக விளையாட முடியாது என கடந்த ஆக. 28ல் மறுத்தார். அதேநேரம், சமீபத்தில் ஜெர்மனி, போஸ்னிய தொடர் என அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 

இவருக்குப் பதில் சசிக்குமார் முகுந்த் 24, சேர்க்கப்பட்டார். ஆனால் தரவரிசை புள்ளி முக்கியம் என்பதால் இந்தியாவுக்கு விளையாட முடியாது என அவரும் மறுத்துவிட, தற்போது சாகேத் மைனேனி விளையாட உள்ளார். 

அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலர் அனில் துபார் கூறுகையில்,‘‘டேவிஸ் கோப்பை தொடரில் விளையாட மறுத்த சுமித் நாகல், மற்ற போட்டிகளில் பங்கேற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக நமது சிறந்த வீரர்கள் தான் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புவோம். இதில் சந்தேகம் இல்லை. பின்லாந்து போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து கட்டாயம் விவாதிக்கப்படும்,’’ என்றார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: