இந்தியாவுக்கு உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் கணிப்பு

Spread the love

புதுடில்லி: ‘‘அடுத்து நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது,’’ என, தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்க இருந்த ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது சீசன், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனில் வரும் அக். 17 – நவ. 14ல் நடக்கவுள்ளது. கடந்த 2007ல் நடந்த முதல் சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அதன்பின், 2014ல் பைனல் வரை சென்றிருந்தது.

இம்முறை கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பது குறித்து தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கூறியது: கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனெனில் ஐ.பி.எல்., தொடர் மூலம் இந்திய வீரர்களுக்கு நிறைய ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடிய அனுபம் உள்ளது. ஒவ்வொரு வீரரும் குறைந்த பட்சம் 150 முதல் 200 ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். இதுபோல வேறு எந்த அணியிலும் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்திய அணி அரையிறுதி வரை செல்வதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

இத்தொடரில் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் சிறப்பாக செயல்படுகிறார். போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடி, அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறார். இவரை ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: