இந்தியக் காற்பந்தில் அடியெடுத்து வைக்கும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் அணி உரிமையாளர்கள்

Spread the love


இங்கிலீஷ் பிரிமியர் லீகின் முன்னணி அணியாக விளங்கும் மென்செஸ்ட்டர் சிட்டி அணியின் உரிமையாளர்கள் இந்தியக் காற்பந்தில் அடியெடுத்து வைக்கவுள்ளனர்.

பிரபல இந்தியக் காற்பந்து அணியான மும்பை சிட்டி FC அணியின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்க மென்செஸ்ட்டர் சிட்டி அணியின் உரிமையாளர்கள் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இரண்டு தரப்புகளும் அது குறித்துக் கருத்துரைக்கவில்லை.

இந்தியாவில் தற்போது காற்பந்து மோகம் அதிகரித்து வருவதால் அதில் முதலீடு செய்வது நல்ல முடிவு என்றும் கூறப்படுகிறது.

தற்போது உலகின் ஆக அதிக மதிப்புமிக்க காற்பந்துக் குழுமமான CFG குழுமம், மென்செஸ்ட்டர் சிட்டி அணியை நிர்வகிக்கிறது.

அதன் மதிப்பு சுமார் 4.8 பில்லியன் டாலர் ஆகும்.

CFG குழுமத்திற்குக் கீழ் 7 காற்பந்து அணிகள் உள்ளன.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *