இது உங்கள் இடம்: திருந்தாத தி.மு.க.,வினர்| Dinamalar

Spread the love


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

தேர்தல் பிரசாரத்தில், தனிமனித தாக்குதல் நடத்துவதில், தி.மு.க.,வினர் எல்லை மீறி போகின்றனர்.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆ.ராசா, பிரசாரத்தின்போது, முதல்வர் என்றும் பாராமல், அவரை அநாகரிக வார்த்தைகளால் வசைபாடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க.,வினர் மட்டுமல்ல, நடுநிலையாளர் அனைவரையும், ஆ.ராசாவின் பேச்சு, முகம் சுளிக்கச் செய்துள்ளது.அதேபோல, ஐ.லியோனியும், ‘நாலாந்தர’ பேச்சாளர் போல, பிரசார கூட்டத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசி, எல்லை மீறுகிறார். இது போன்ற நிகழ்வுகள், தி.மு.க.,வினர் திருந்தவே இல்லை என்பதையே, எடுத்துக் காட்டுகிறது.

latest tamil news

ஆட்சி மாற்றம் என்பது, ஆரோக்கியமானதாக இருக்காது என்பதே, தி.மு.க.,வினரின் நடவடிக்கையில் இருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆ.ராசா, லியோனி போன்றோருக்கு நாவடக்கம் தேவை. தனிமனித தாக்குதல் நடத்தவோ, பிறப்பை பற்றி பேசவோ, யாருக்கும் உரிமையில்லை.இதுபோன்ற செயல்களில், தி.மு.க., வினர் தொடர்ந்து ஈடுபட்டனர் என்றால், சொந்த காசில், அவர்களே தங்களுக்கு சூனியம் வைத்துக் கொள்கின்றனர் என, அர்த்தம்.

அநாகரிக பேச்சை, இப்போது மக்களும் விரும்புவதில்லை. தி.மு.க.,வினர் இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால், தேர்தல் முடிவு, அக்கட்சிக்கு சாதகமாக இருக்காது.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *