“இது இந்தியாவின் ஆகச்சிறந்த அணி!” – கோலி அணியை புகழ்ந்த கிளைவ் லாய்ட் | Virat Kohli s Team is the Best Indian Cricket Team ever and I think so s West Indies Cricket Legend Clive Lloyd | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Virat-Kohli-s-Team-is-the-Best-Indian-Cricket-Team-ever-and-I-think-so-s-West-Indies-Cricket-Legend-Clive-Lloyd

விராட் கோலி தலைமையிலான அணிதான் இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த அணி என புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளைவ் லாய்ட். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 

“இந்திய கிரிக்கெட் அணி சிறப்பானதொரு அணியாக இருக்கிறது. அவர்களிடம் வெரைட்டி உள்ளது. வீரர்கள் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்கள். தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் வீரர்களாகவும் விளங்குகிறார்கள். நான் அப்படிதான் கருதுகிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் கடுமையான பின்னடைவுக்கு பிறகு வெகுண்டு எழுந்தார்கள். அந்தத் தொடரில் இருந்து அவர்களது அற்புதமான ஆட்டத்தை பார்த்ததன் மூலம் சொல்கிறேன் இது இந்தியாவின் ஆகச்சிறந்த கிரிக்கெட் அணி” என டெலிகிராப் பத்திரிகையில் அவர் தெரிவித்துள்ளார். 

image

கபில் தேவ், கங்குலி, தோனி என பல கேப்டன்கள் இந்தியாவை முன்னின்று வழி நடத்தி இருந்தாலும் கோலி தலைமையிலான இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *