இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் இந்தப் பருவ ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகின்றன.
கிண்ணத்தை வெல்ல மென்செஸ்டர் சிட்டி குழுவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அது லிவர்ப்பூல் அணியை விட 1 புள்ளி அதிகமாகப் பெற்றுள்ளது.
மென்செஸ்டர் சிட்டி பிரைட்டன் அணியைச் சந்திக்கிறது. ஆட்டத்தை மென்செஸ்டர் சிட்டி வென்றால் அது கிண்ணத்தைக் கைப்பற்றும்.
ஆனால் ஆட்டத்தை மென்செஸ்டர் சிட்டி சமநிலையில் முடித்தாலோ, தோற்றாலோ அது லிவர்ப்பூல் அணிக்கு வாய்ப்பை உருவாக்கும்.
அதே நேரத்தில் லிவர்ப்பூல் அணி வூல்வ்ஸ் (Wolverhampton) அணியைக் கட்டாயம் வெல்ல வேண்டும்.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஆட்டங்கள் தொடங்குகின்றன.
மொத்தம் 10 ஆட்டங்கள், 20 அணிகளும் விளையாடுகின்றன.
பட்டியலில் நான்காம் இடத்திற்காக அதிகப் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய பட்டியல் நிலவரம் (முதல் ஆறு இடங்கள்)
1. மென்செஸ்ட்டர் சிட்டி – 95 புள்ளிகள்
2. லிவர்ப்பூல் – 94 புள்ளிகள்
3. செல்சி – 71 புள்ளிகள்
4. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் – 70 புள்ளிகள்
5. ஆர்சனல் – 67 புள்ளிகள்
6. மென்செஸ்ட்டர் யுனைட்டட் – 66 புள்ளிகள்