இங்கிலாந்து தொடர் ரத்தா * சோகத்தில் பாக்., அணி

Spread the love


லண்டன்: பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளதால் இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்தாக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 16 ஆண்டுக்குப் பின் வரும் அக்.,ல் பாகிஸ்தான் சென்று 2 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க இருந்தது. தவிர இங்கிலாந்து பெண்கள் அணியும் 2 ‘டுவென்டி–20’, 3 ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) மறுஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணியில் பாகிஸ்தான் பயணம் சந்தேகமாகி உள்ளது. 

கடந்த 2016ல் வங்கதேச பயணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மார்கன், அலெக்ஸ் ஹேல்ஸ் உட்பட பலர் விலகினர். இதுபோல, தொடர் ரத்தாகவில்லை என்றாலும் முன்னணி வீரர்கள் விலகுவர் எனத் தெரிகிறது. இ.சி.பி., செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,‘‘எந்த தொடராக இருந்தாலும் பாதுகாப்பு ஆய்வு என்பது இருக்கும். இது தொடரும்,’’ என்றார். 

ஏற்கனவே, 18 ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் வர இருந்த நியூசிலாந்து அணியின் பயணம் சந்தேகமாக உள்ளது. தற்போது இங்கிலாந்து தொடரும் குழப்பத்தில் உள்ளது பாகிஸ்தான் அணிக்கு சோகம் தான். 

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: