ஆஸ்திரேலிய வெள்ளம் – முதல் மரணம்

Spread the love


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், வெள்ள நீரில் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் வெள்ளத்தால் காரில் சிக்கி மாண்டதாக நம்பப்படுகிறது. ஆஸ்திரேலிய வெள்ளத்துக்குப் பலியாகியிருக்கும் முதல் நபரான அவரை இன்னும் அடையாளம் காணவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

இதுவரை சுமார் 40,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மற்ற சில பகுதிகளில், மழை நீர் வடிந்துவிட்டதால், சுத்திகரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதோடு, உணவும் மற்ற அத்தியாவசியப் பொருள்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வான்வழி அனுப்பப்பட்டன.

வெள்ளத்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஆக மோசமாக பாதிக்கப்பட்டது.

அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதனால், வெள்ள அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போக வாய்ப்புள்ளது என மாநில முதலமைச்சர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் (Gladys Berejiklian) எச்சரித்துள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *