ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க

Spread the love

மெல்போர்ன்: எமிரேட்சில் நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன், கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 36 போட்டிகள் வரும் செப். 19 முதல் அக். 15 வரை எமிரேட்சில் நடக்கவுள்ளன. இதில், சர்வதேச அட்டவணை காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடர், விண்டீஸ்–ஆப்கானிஸ்தான் அணிகளுடனான முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள், மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எனவே, டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஹேசல்வுட், மிட்சல் மார்ஷ், ஆடம் ஜாம்பா, ஆன்ட்ரூ டை, கிறிஸ் லின், பென் கட்டிங், நாதன் கூல்டர்–நைல் உள்ளிட்ட முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது அணிக்காக களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாட் கம்மின்ஸ், தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் இப்போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடர் முடிந்ததும், எமிரேட்சில் ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை (அக். 17 – நவ. 14) நடக்கவுள்ளது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: