ஆஸ்திரேலியா: மெல்பர்னில் தடுப்பூசி விதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கூட்டத்தைக் கலைத்த காவல்துறையினர்

Spread the love


Images

  • Aus

    படம்: AFP

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், COVID-19 தடுப்பூசி விதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுமான ஊழியர்களைக் கலகத் தடுப்புக் காவலர்கள் கலைத்துள்ளனர்.

மிளகுத் தெளிப்பான், நுரையால் செய்யப்பட்ட தடி, ரப்பர் குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர்.

மெல்பர்னின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கட்டுமானப் பணிகளின்போது பயன்படுத்தும் காலணிகளையும், மேற்சட்டையையும் அணிந்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் போத்தல்களை வீசி எறிந்து, காவல்துறைக் கார்களைத் தாக்கியதால், வன்முறை வெடித்தது.

கட்டுமான ஊழியர்கள் அனைவரும் வார இறுதிக்குள் ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என்று விக்டோரியா மாநில அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

அதனால், கட்டுமானத் துறைப் பணிகளை இரண்டு வாரம் நிறுத்தி வைக்க நேரிட்டது.

கட்டுமானத் தளங்கள் கட்டாயமாக மூடப்படுவதால், ஆஸ்திரேலியப் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: