ஆஸ்திரேலியாவை அலைக்கழிக்கும் வரலாறு காணாத வெள்ளம் – பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை

Spread the loveஆஸ்திரேலியாவில் அரை நூற்றாண்டு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சில வட்டாரங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஆஸ்திரேலியாவில் சுமார் 10 மில்லியன் பேரும், மில்லியன் கணக்கான கால்நடைகளும் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மழை, வெள்ள அபாயம் முழுமையாக நீங்கவில்லை என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கி எவரும் மாண்டதாக இதுவரை தகவல் இல்லை.

ஆயிரக் கணக்கானோரை மீட்புப்படையினர் காப்பாற்றினர்.

வெள்ளத்தில் பாலங்கள் அடித்து செல்லப்படுவது, வீடுகள் மூழ்குவது, கால்நடைகள் பரிதவிப்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன.

நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *