ஆஸ்திரேலியாவில் ஒரு வாரத்திற்குப் பிறகு உள்ளூர் அளவில் கிருமித்தொற்று

Spread the love


ஆஸ்திரேலியாவில் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருவருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

26 வயது ஆடவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பே நோய் தொற்றியிருந்ததாகவும்,
அறிகுறிகள் தென்பட்டதும் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்றும் குவீன்ஸ்லந்து முதலமைச்சர் அனஸ்டாசியா பாலாஸ்குக் (Annastacia Palaszczuk) தெரிவித்தார்.

இன்று முதல், குவீன்ஸ்லந்து மாநிலத் தலைநகரான பிரிஸ்பேனில் மருத்துவமனைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் வருகையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.

உட்புறங்களிலும் பொதுப் போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆடவருக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பதைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடைத்தொகுதிகள், பேரங்காடிகள், இத்தாலிய உணவகம் ஆகியவற்றுக்கு ஆடவர் சென்றிருந்ததால் அவற்றுக்குச் சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *