ஆர்சனல் அணியின் முன்னாள் வீரர் ரேயிஸ் கார் விபத்தில் மரணம்

Spread the love


Images

  • rayes

    படம்; REUTERS

ஆர்சனல் காற்பந்து அணியின் முன்னாள் நட்சத்திரம் ஜோசே அன்டோனியோ ரேயிஸ் (Jose Antonio Reyes) கார் விபத்தில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னிலை ஆட்டக்காரான ரேயிஸுக்கு வயது 35.

ஆர்சனல் அணி புகழின் உச்சியில் இருந்த காலமான 2003-2004 பருவத்தில் அந்த அணிக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களில் ரேயிஸும் ஒருவர்.

ரேயிஸ் ரியல் மெட்ரிட் அணிக்கும் விளையாடி ஸ்பானிய லீக் கிண்ணத்தை வென்றுள்ளார்.

யூரோப்பா லீக் கிண்ணத்தை ரேயிஸ் 5 முறை வென்றுள்ளார்.

ரேயிஸ் மரணத்திற்குக் காற்பந்து ரசிர்களுடன், காற்பந்து அணிகளும் சமூக ஊடகங்கள் வழியாக வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றன.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *